வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக புகைப்படக் கருவிகளின் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. இன்றைய சந்தையில் காணப்படும் ஒவ்வொரு கமெராவும் பல்வேறு வகையான சிறப்பியல்புகளுடன் (features) வெளிவருகின்றன. இவ் இயல்புகள் கமெராவின் வகை (type) , உற்பத்தியாளர் (brand) என்பவற்றைப் பொறுத்து வேறுபடும். இவ் இயல்புகள் தொடர்பான அறிவு, கமெரா ஒன்றை வாங்குவதற்கும், அதனை உபயோகிப்பதற்கும் மிகவும் அவசியமாகும். இந்த பதிவில் இன்றைய புகைப்படக் கருவிகளில் காணப்படும் பொதுவான சில இயல்புகளைப் பற்றி (features) பார்ப்போம்.
பிரிதிறன் என்பது ஒரு கமெராவினால் உருவாக்கக் கூடிய படம் ஒன்றின் துல்லியமாகும். இது மெகா பிக்சல் (megapixel) மூலம் அளவிடப்படும். மெகா பிக்சல் பற்றிய விளக்கத்தை கடந்த பதிவில் பார்த்தோம். படங்கள் பிக்சல் என்னும் நுண் ஒளிர் புள்ளிகளால் ஆனவை. 3.1 மெகா பிக்சல் கமெராவின் மூலம் எடுக்கப்படும் படமானது 2048 நிரல்களிலும் (Columns) 1536 நிரைகளிலும் (rows) அமைந்த 3145728 பிக்சல்களால் உருவாக்கப்படுகின்றது. மெகா பிக்சல் அதிகரிக்கும் போது படத்தின் துல்லியம் அதிகரிக்கும். மேலும் மெகா பிக்சல் அதிகரிக்கும் போது படத்தின் அளவும் அதிகரிக்கும்.
கணனி ஒன்றின் முழுத் திரையில் பார்க்கும் அளவிலான தெளிவான புகைப்படங்களை எடுக்க 2MP உள்ள கமெரா போதுமானது. 3.1 MP கமெராவால் எடுக்கப்படும் படத்தை 5" X 7" அளவுள்ள தாளில் தெளிவாக தெரியும் வகையில் அச்சிடலாம். மிகப் பெரிய அளவில் அச்சிட வேண்டிய தேவை ஏற்படும் போது அதிக அளவிலான மெகா பிக்சல் உள்ள கமெரா தேவைப்படும். கீழே உள்ள படமானது மெகா பிக்சல் அதிகரிக்கும் போது படத்தின் அளவு எவ்வாறு வேறுபடுகின்றது என்பதைக் குறிக்கின்றது.
image source - howstuffworks.com
தற்போது 5 MP தொடக்கம் 30 MP வரையிலான கமெராக்கள் சந்தையில் கிடைக்கின்றன. பொதுவாக நிபுணத்துவ புகைப்படக் கலைஞர் ஒருவரின் தேவைக்கு 6 MP - 13MP இடையிலான கமெராவானது தாராளமாகப் போதுமானது.
உணரி (Sensor)
முன்னைய பதிவிலே குறிப்பிட்டபடி, உணரியானது கமெரா ஒன்றினால் உருவாக்கப்படும் படத்தின் தன்மையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்கால கமெராக்களில் பொதுவாக CCD, CMOS என இரண்டு வகையான உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. CCD உணரியை உடைய கமெராக்களினால் உருவாக்கப்படும் படங்கள் அதிக துல்லியமானவை.
ஒளியியல் உருப்பெருக்கம் (Optical Zoom)
இது குறிச்சூட்டுக் கமெராக்களில் (Point and shoot camera) பொதுவாகக் காணப்படும் ஒரு இயல்பாகும்.தொலைவில் உள்ள பொருட்களை வில்லைகளின் (lens) மூலம் உருப்பெருக்கத்தின் மூலம் பெரிதாக்கி பதிவு செய்தலை இது குறிக்கும். உருப்பெருக்கமானது மடங்குகளில் குறிப்பிடப்படும். உதாரணமாக ஒரு கமெராவின் ஒளியியல் உருப்பெருக்கம் 4X என குறிப்பிடப்பட்டிருப்பின், அந்த கமெராவானது தொலைவில் உள்ள ஒரு பொருளின் விம்பத்தை நான்கு மடங்கு பெரிதாக்கி படமாக தெளிவாகப் பதிய வல்லது என அர்த்தம். தற்போது 3X தொடக்கம் 24X வரையான உருப்பெருக்க அளவுகளில் குறிச்சூட்டுக் கமெராக்கள் கிடைக்கின்றன. ஒளியியல் உருப்பெருக்கத்தின் மூலம் படத்தின் தெளிவில் மாற்றம் ஏற்படுவதில்லை. உருப்பெருக்கம் அதிகரிக்க கமெராவின் அளவும் அதிகரிக்கும்.ஒளியியல் உருப்பெருக்கத்தால் விம்பத்தில் ஏற்படும் மாற்றத்தை கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும்.
எண்ணியல் உருப்பெருக்கம் (Digital Zoom)
எண்ணியல் உருப்பெருக்கமானது தொலைவில் உள்ள பொருளை அண்மையில் கொண்டு வருவதில்லை. மாறாக கமெராவின் திரையில் தெரியும் விம்பமானது எண்ணியல் முறையில் செதுக்கப்பட்டு (crop) பெரிதாக்கப்படுகின்றது. இம் முறையில் உருப்பெருக்கம் செய்யும் போது படத்தின் தரமும், தெளிவும் கீழே உள்ள படத்தில் காட்டியவாறு குறையும்.
உண்மையிலே எண்ணியல் உருப்பெருக்கமானது கமெராவின் உபயோகத்திற்கு தேவையற்ற ஒரு வசதியாகும். ஒரு படத்தை எடுத்த பின்பு விம்பத்தை செம்மைப்படுத்தும் மென்பொருட்கள் (image editing software) மூலம் இவ் வசதியை நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே கமெரா வாங்கும் போது எண்ணியல் உருப்பெருக்கம் பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.
உணரி (Sensor)
முன்னைய பதிவிலே குறிப்பிட்டபடி, உணரியானது கமெரா ஒன்றினால் உருவாக்கப்படும் படத்தின் தன்மையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்கால கமெராக்களில் பொதுவாக CCD, CMOS என இரண்டு வகையான உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. CCD உணரியை உடைய கமெராக்களினால் உருவாக்கப்படும் படங்கள் அதிக துல்லியமானவை.
ஒளியியல் உருப்பெருக்கம் (Optical Zoom)
இது குறிச்சூட்டுக் கமெராக்களில் (Point and shoot camera) பொதுவாகக் காணப்படும் ஒரு இயல்பாகும்.தொலைவில் உள்ள பொருட்களை வில்லைகளின் (lens) மூலம் உருப்பெருக்கத்தின் மூலம் பெரிதாக்கி பதிவு செய்தலை இது குறிக்கும். உருப்பெருக்கமானது மடங்குகளில் குறிப்பிடப்படும். உதாரணமாக ஒரு கமெராவின் ஒளியியல் உருப்பெருக்கம் 4X என குறிப்பிடப்பட்டிருப்பின், அந்த கமெராவானது தொலைவில் உள்ள ஒரு பொருளின் விம்பத்தை நான்கு மடங்கு பெரிதாக்கி படமாக தெளிவாகப் பதிய வல்லது என அர்த்தம். தற்போது 3X தொடக்கம் 24X வரையான உருப்பெருக்க அளவுகளில் குறிச்சூட்டுக் கமெராக்கள் கிடைக்கின்றன. ஒளியியல் உருப்பெருக்கத்தின் மூலம் படத்தின் தெளிவில் மாற்றம் ஏற்படுவதில்லை. உருப்பெருக்கம் அதிகரிக்க கமெராவின் அளவும் அதிகரிக்கும்.ஒளியியல் உருப்பெருக்கத்தால் விம்பத்தில் ஏற்படும் மாற்றத்தை கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும்.
image source - scrapjazz.com
SLR கமெராக்களில் வெவ்வேறு குவிய நீளங்களை (Focal length) உடைய வில்லைகளை (lens) இணைப்பதன் மூலம் உருப்பெருக்க அளவை தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும்.
எண்ணியல் உருப்பெருக்கமானது தொலைவில் உள்ள பொருளை அண்மையில் கொண்டு வருவதில்லை. மாறாக கமெராவின் திரையில் தெரியும் விம்பமானது எண்ணியல் முறையில் செதுக்கப்பட்டு (crop) பெரிதாக்கப்படுகின்றது. இம் முறையில் உருப்பெருக்கம் செய்யும் போது படத்தின் தரமும், தெளிவும் கீழே உள்ள படத்தில் காட்டியவாறு குறையும்.
image source - scrapjazz.com
விம்ப நிலையாக்கம் (Image stabilization)
ஒரு பொருளைப் புகைப்படம் எடுப்பதற்காக நாம் கமெராவை இயக்கும் போது எமது கைகளில் ஏற்படும் அதிர்வு காரணமாக எடுக்கப்படும் படத்தில் தெளிவின்மை (blur) ஏற்படக்கூடும். இதனைத் தடுப்பதற்காக நவீன கமெராக்களிலே விம்ப நிலையாக்கம் (Image stabilization) எனும் உத்தி பயன்படுத்தப்படுகின்றது. கமெராக்களில் இந்த உத்தியானது உருப்பெருக்கத்தைப் போல ஒளியியல் முறையிலும் (Optical image stabilization), எண்ணியல் முறையிலும் (Digital image stabilization) கையாளப்படுகின்றது. ஒளியியல் விம்ப நிலையாக்கத்தை கொண்டுள்ள கமெராக்கள் அதிக உபயோகம் வாய்ந்தவை.
காமெராக்களின் சிறப்பியல்புகளில் சிலவற்றையே மேலே பார்த்தோம். கமெரா தொடர்பான இன்னும் பல சிறப்பியல்புகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.